அழகூட்டும் மாஸ்க் கருவி...போட்டோசாப்.

நான் பதிவிட்டு பல வாரங்கள் ஆகிவிட்டது. இத்தேக்க நிலை இனிமேல் வராமல் பார்த்துக் கொள்வேன்.. சரி..

போட்டோசாப்பில் மிக மிக முக்கியமான கருவி மாஸ்க் ,அதாவது படத்திற்கு முகமுடியிட்டு அழகு படுத்தப்போகிறோம். இக்கருவி பழக்கமாகிவிட்டால் பல அழகிய கவித்துவம் மிக்க படங்களை உருவாக்கலாம். கீழே உள்ள படங்கள் இவ்வாறு உருவாக்க பட்டவைகளே. முதலில் இதை பார்த்துக் கொள்ளுங்கள்.

படம்.1. போட்டோசாப்பில் இரண்டு படங்களை திறந்துள்ளேன்.

இரண்டு படங்களை மாஸ்கின் உதவியால் ஒட்டப்போகிறேன். இம்முறையில் ஒட்டிய வடிவத்தை பார்க்கமுடியாது.. ஒன்றுடன் ஒன்று இழைந்து காணப்படும்....
படம்.2. இப்படத்தில் ரோஜாக்கள் உள்ள படத்தின் மீது குழந்தையின் படத்தை காப்பி & பேஸ்ட் முறையில் ஒட்டியுள்ளேன்.

இந்நிலை லேயர் விண்டோவில் தெரிகிறது..படம்.3. குழந்தையுள்ள படத்தின் மீது தான் மாஸ்க் உண்டாக்கப்
போகிறோம். அதற்கு எளிய வழி இவ்விண்டோவில் எப் அய்க்கானுக்கு பக்கத்தில் உள்ள சதுர வடிவ வட்டத்தினை கிளிக் செய்ய மாஸ்க் தோன்றிவிடும்.
படம்.4. டூல் பாரில் உள்ள கிரேடியன் தேர்வு செய்ய வேண்டும். கிரேடியன் வண்ணம் கருப்பில் இருந்து வெள்ளைக்கு செல்வதாகவே இருக்க வேண்டும்.

இதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு மாஸ்க் மீது ஒரு கிளிக் செய்யுங்கள்.. அடையாளப்படுத்தியுள்ளேன்.படம்.5.

இவ்விடத்தில் மிக மிக முக்கியமான இடம்.. முதலில் லேயரில் நமது தேர்வு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு மறைக்க வேண்டிய இடத்தில் கிரேடியன் தேர்வை அழுத்தி இழுக்க படம் இழைந்து மறையும்.. எவ்வளவு தூறம் மறைய வேண்டும் என்பதை உங்களின் தேர்வை பொருத்தே அமையும்...

இப்போது மாஸ்கை பார்த்தால் கருப்பு வெள்ளை தோற்றம் பதிவாகியிருக்கிறது.. நமக்கு வேண்டிய தோற்றம் கிடைத்தவுடன் சேமியுங்கள்.. நீங்கள் இக்கருவியில் பழகிவிட்டால் நல்ல நல்ல வாழ்த்து அட்டைகளை உண்டாக்கலாம்..
இவை என்னால் இம்முறையில் உண்டாக்கப்பட்டவையே...

பழகப் பழக 2-3 மாஸ்குகளை பயன்படுத்துங்கள்...

8 Response to அழகூட்டும் மாஸ்க் கருவி...போட்டோசாப்.

August 15, 2010 at 4:40 AM

புதியதொரு பாடம் கற்றுக் கொண்டேன்...

பகிர்வுக்கு நன்றி...

புகழ்
August 16, 2010 at 3:20 AM

அருமையான பதிவு, இன்னும் சற்று விளக்கமாக கொடுக்க வேண்டுகிறேன். நன்றி!

Anonymous
August 16, 2010 at 8:09 AM

mama adobe photoshop softwarera upload pannuga. plz

August 21, 2010 at 11:18 AM

பாடம் கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி...

இரா.சுப்பிரமணியன்
September 28, 2010 at 3:53 AM

தோழர், வணக்கம்.
தங்கள் குரலுடன் அமைந்திட்ட விளக்கப் பாடங்கள், படங்கள் வெகு அற்புதம்!!
கணினியின் போட்டோஷாப் மென்பொருள் பயன்பாட்டினை, அறிந்து கொள்ள அணுகுவோர் அனைவருக்கும் உதவும் தங்கள் பணி சிறக்க ஒரு பயனாளியாய் வாழ்த்துகிறேன்!!
ஊருணி நீர் நிறைந் தற்றே
பேரறி வாளன் திரு!

March 9, 2011 at 5:46 AM

எளிமையான விளக்கத்துடன் போட்டோசாப் பாடம். அருமையா இருக்கு. தொடர்ந்து கலக்குங்க.

Anonymous
April 14, 2013 at 8:15 AM

I am гeally еnϳoying the theme/ԁesign of yοur ωebѕіte.
Do you ever run into any web browseг compatіbility issues?
A few of my blog visitors haѵe complained about my blοg not
opеrating соrrectly in Εхplorеr but lοoks
greаt in Safaгі. Do you havе any
tips to helρ fix thіs pгоblem?


Look at my page :: Nagelpilz Hausmittel

Anonymous
April 15, 2013 at 4:50 PM

Mу brother reсommended Ι wοuld possibly
likе this website. Ηe used to be
entirely right. Thіs ρut up truly made
mу day. You саnn't consider just how so much time I had spent for this information! Thank you!

My blog ... pomata emorroidi

இதை உங்கள் பதிவில் இணைக்க...