படங்களைமட்டும் வித்தியாசமான தேடும் எந்திரங்கள் (Search Engines )

பிரபல தேடு எந்திரங்களான கூகுள், யாகு, பிங்,ஆல்டாவிஸ்டா,ஆஸ்க் போன்றவற்றை தேடும் பொருள், செய்திகள் அடிப்படையில் தேடுவோம். ஆனால் படங்களை மட்டும் அடிப்படையாக தேடும் எந்திரங்களை இப்போது நாம் பார்க்கப்போகிறோம். புதிய அனுபவத்தை உங்களுக்கு இத்தளங்கள் கொடுக்கும்.

1.Space Time 3D


ஸ்பேஸ் டைம்  தேடு தளம் தேடும் சொற்களை கொடுத்தவுடன் 3டி அனிமேசன் தோற்றத்தில் தகவல்களை தேடிக் கொடுக்கிறது.
இதில் கூகுள், விக்கிபீடியா,படங்கள், யூ டியூப் போன்ற தேர்வுகளிலும் தேட வசதி கொடுத்துள்ளார்கள். 


2. Cooliris


கூலிரைஸ் தளத்தை நெருப்பு நரி உலாவி வழியாக, அதன் நீட்சியாக பயன்படுத்தலாம். இலவசமாக பதிவிறக்கம் செய்ய எளிதாக பயன்படுத்தும் வசதி கொடுத்துள்ளார்கள். 
நமது கணினியில் உள்ள படத்தில் இருந்து வலைத்தளங்களின் படம் வரை தேடித்தருவது இதன் சிறப்பு.

3. Middle Spot

 மிடில் ஸ்பாட் தளத்தின் சிறப்பே தேடும் சொற்றொடர்களுக்கு ஏற்ற விளக்கத்துடன் தேடித்தருகிறது. இத்தேடு இயந்திரம் பிடித்திருந்தால் கூகில் குறோம், நெருப்பு நரியுடன் நீட்சியாக பயன்படுத்தலாம்.

4. Spezify

 இத்தளத்தின் சிறப்பே எல்லா நிலைகளிலும், அதாவது படங்கள், ஒலிக்கோப்புகள், வலைத்தளங்கள் தேடுகிறது. டிவிட்டர், பேஸ் புக் அடிப்படையிலும் தேடுத்தருவது இதன் சிறப்பு.

No Response to "படங்களைமட்டும் வித்தியாசமான தேடும் எந்திரங்கள் (Search Engines )"

இதை உங்கள் பதிவில் இணைக்க...