உங்கள் பென் ட்ரைவர்களை வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க...

ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிளாப்பி ட்ரைவர்கள் வைரஸ்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளை செய்து கொண்டு இருந்தன.

இப்போது காலம் மாறிவிட்டது.

பிளாப்பிகளுக்கு மாற்றாக பிளாஷ் டிரைவர்கள்...

ஆனால் பிளாப்பி பணிகளை உங்கள் பென் டிரைவ்கள் செய்கிறது.

உங்கள் கோப்புகளுடன் வைரஸ்கள்....

தடுக்கமுடியுமா?

முடியும்.

சின்ன கோப்பை பதிவிறக்கம் செய்தால் போதும்.

சுறுக்கப்பட்ட வடிவத்தில் கிடைக்கும்.

இக்கோப்பின் அளவு 500கேபி அளவை மட்டுமே யுஎஸ்பி டிரைவில் பிடிக்கப்போகிறது.

இங்கே கிளிக் செய்து கோப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

சுறுக்கப்பட்ட கோப்பான ரார் (Rar) வடிவத்தை விரித்துக் கொள்ளலாம் அல்லது சிப் 7 பதிப்பில் திறந்து கொள்ளலாம்.திறக்கப்பட்ட கோப்புக்களை உங்கள் பென் டிரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் ஒட்டுங்கள்.

இதற்கு பென்பொருள் மன்னிக்கவும் மென்பொருள் நிறுவத்தேவை இல்லை.

விரிக்கப்பட்ட கோப்பில் uspwriteProtect.exe பைலை கிளிக் செய்ய....

மொழியை தேர்வு செய்து...Usp write protect ON
      
Usp Write Protect OFF
   
இரு தேர்வில் ஆன் செய்து கொள்ளுங்கள்.


முடிந்த்து.

பாதுபாப்பு பணி அக்கோப்பு பார்த்துக் கொள்ளும்.

எந்த பேய், பூதம், பிசாசுக்களை அண்ட விடாது.


இந்த தாயத்து ஆப் ஆகிவிட்டால் வைரஸ் ஆட்டுவித்துவிடும்.
************

இன்று

நாள் 06.06.2010...

6.6.66 இதே தேதியில்தான் இந்த மகான் பிறந்தான்.

நாட்களை பாருங்கள்.6666.

20 ஆண்டுகளுக்கு முன் வெட்டியாய் தெருக்களை சுற்றிக் கொண்டிருந்தவன்.

அதே வேலையைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன்.

இணையத்தை வலைபக்கத்தினூடாக சுற்றிக் கொண்டு இருக்கிறேன்.

44 வயதில் ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

கொஞ்சம் போட்டோசாப், பிளாக் என்று பயணித்துக் கொண்டு இருக்கிறேன்.

மார்க்சியம்... என்னை ஒழுங்குபடுத்தியது.

சிவப்பு பெரியார்

சிவப்பு அம்பேத்கர் இப்போதைய தேவை என்ற கொள்கையில் உறுதியாக உள்ளவன்.

முதுகெலும்பில் பெரிய அறுவை செய்து ரூபாய் 10,000 செலவில் போல்டை என் துனைவியாருக்கு வைத்தது தான் அவர் கண்ட பலன்.

இரண்டு மகன்கள்...

தமிழ்நட்டில் தமிழில்தான் படிக்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்து பிறழாது... மகன்கள் தமிழ் வழியில் தான் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நான் தாண்டாத 250 மதிப்பெண்ணை 10ம் வகுப்பில் 430 எடுத்து என்னை வெட்கப்பட வைத்தவன் பெரியவன் அன்பு. பெயரே அன்புதான்.

துறுதுறு... சுறுசுறுப்பு திலீபன் இளையவன்.

இவர்களின் ஒத்துழைப்போடு இவர்களின் கைபிடித்து நடக்கக் கற்று வருகிறேன்.


இப்படம் துனைவியார் எடுத்தது. போட்டோசாப் கொஞ்சம் அழகு படுத்தி இருக்கிறது.

தோழமையுடன்....

4 Response to உங்கள் பென் ட்ரைவர்களை வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க...

June 5, 2010 at 8:58 PM

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார். நானும் 6/6 தான். ஆனால் நீங்கள் 6666..

கிரேட் சார்..

June 5, 2010 at 9:03 PM

சரவணக்குமார்... தோழா வாழ்த்துக்கள். எல்லா நிலைகளிலும் வெற்றியை தொடருங்கள்...

June 6, 2010 at 5:52 AM

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்......

June 6, 2010 at 6:13 PM

வாழ்த்துக்களை பகிர்ந்த உலவுக்கு நன்றிகள்.

இதை உங்கள் பதிவில் இணைக்க...