தீப் பிடித்து எரியும் எழுத்து-போட்டோசாப்.
பதிவிட்டு நீண்ட நாளாகிவிட்டது. இப்போது பார்க்கும் நுட்ப்ப் பதிவு. தீப்பற்றி எரியும் தோற்றத்துடன் கூடிய எழுத்து.

எளிதாக புரிய பல பட விளக்கம் கொடுத்துள்ளேன்.

சரி. பயிற்சிக்கு செல்வோம்.


படம்.1.

கருப்புப் பின்னணியில் தீ என்று தட்டச்சு செய்துள்ளேன்.

தீ தோற்றம் வர கருப்பு பிண்ணனிதான் சிறப்பாக இருக்கும்.

படம்.2.


எழுத்தின் மீது தீ தோற்றம் உண்டாக்கப்போகிறோம்.

அதற்கு படத்தை படுக்க வாட்டில் திருப்ப..

Edit-Transform-Rotate 90 CW

தேர்வு செய்யுங்கள்.

படம்.3.


தீ எழுத்து படுக்க வாட்டில் திரும்பியுள்ளது.

படம்.4.


தீ கொழுந்து தோற்றம் உருவாக்க

Filter-Stylize-wind…

சொடுக்க..

படம்.5.

ராஸ்டிட்ரைஸ் செய்ய வேண்டுமா என்று கேட்கும்.

ஆம் என்று ஓகே கொடுங்கள்.

படம்.6.

விண்ட் தேர்வில்

Wind-From the Left தேர்வு செய்ய வேண்டும்.

இப்போது எழுத்தின் மீது நீட்சி போன்ற தோற்றம் வரும்.

ஒரு மூன்று தடவை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

காற்று எபெக்ட் நீளும்.

ஒவ்வொருமுறையும் பில்டருக்கு செல்லும் போது மேலேயே விண்ட் எபெக்ட் தெரியும் அதை கிளிக் செய்தாலே போதும்.

படம்.7.


எழுத்தின் தோற்றம் நீண்டு உள்ளதை பார்க்கிறீர்கள்.

படம்.8.
   
எழுத்தை திரும்பவும் நேராக திருப்ப

படம் 2யை போலவே இங்கு


Edit-Transform-Rotate 90 CCW தேர்சு செய்ய எழுத்து திரும்பும்.

படம்.9.

படத்தில் தீயின் கீற்றுக்களை அழிந்தார் போல செய்ய


Filter- Blur- Gaussian blur

Radus : 1.2 pixles அளவை தேர்வு செய்யவும்.

படம். 10.

அடுத்த தோற்ற மாற்றம்


மோசன் ப்ளுர்

Filter- Blur- Motion blur

Angle:16 Distance : 2.

அளவுகளில் இருக்குமாரு பார்த்துக் கொள்ளுங்கள்.

படம்.11.

அடுத்த தோற்ற மாற்றம்


Filter- Distort-Ripple

தேர்வு செய்ய..படம்.12.

ரிப்பில் விளைவுக்கான சன்னலில்


Amount : -5 அளவை கொடுங்கள்.

படம்.13.

இறுதி கட்டத்திற்கு வந்துள்ளோம்.

Image-Mode-Indexed color


தேர்வு செய்ய படத்தை பிலாட்டன் செய்ய வேண்டுமா என கேடும் விண்டோவுக்கு ஒகே கொடுங்கள். (படம்14.)

படம்.15.

Image-Mode-color table.. விளைவை தேர்வு செய்ய வேண்டும்.

படம்.16.


கலர் டேபில் விண்டோவில் பிளாக் பாடி தேர்வு செய்ய தீ கொழுந்து தோற்றம் உடன் தோன்றும்.தோழர்களுக்கு இவ்விளைவு கொண்டு வர...

நன்றாக புரியவே இவ்வளவு பட காட்சிகளுடன் விளக்கியுள்ளேன்.

நான் பல முறை செய்து பார்த்த பிறகே இவ்விளைவு பயிற்சியை கொடுத்துள்ளேன்.

செய்துபாருங்கள்..

சிறப்பாக வந்தாலும் வராவிட்டாலும் உங்கள் கருத்தை பதிவு செய்ய மறக்க வேண்டாம்.

தோழமையுடன்...


10 Response to தீப் பிடித்து எரியும் எழுத்து-போட்டோசாப்.

June 1, 2010 at 7:00 PM

போடோஷாப் பத்தி ஒன்னும் தெரியாதவர்களுக்கு back ground கருப்பில் இருக்கவேண்டும் இன்று சொல்லும் முன் open a new file இல் இருந்து color bucket tool select செய்து எவ்வாறு கலர் fill up செய்யணும் என்பதில் இருந்து சொன்னால் இன்னும் உபயோகமாக இருக்கும் என்பது கருத்து. உங்கள் விளக்கங்கள் படங்களுடன் தெளிவாக இருக்கிறது. நன்றி

June 1, 2010 at 8:29 PM

உண்மை தான் கௌசல்யா அவர்களே இப்பதிவே நீண்டு செல்வதால் துவக்க,நிலைகளை தவிர்த்து விட்டேன். அடுத்த பதிவில் இக்குறைகளை தவிர்ப்பேன். நன்றி.

June 1, 2010 at 9:23 PM

அருமை படத்துடன் கூடிய எளிய விளக்கங்கள். நானே செய்து விட்டேன் என்றால் பார்த்துகொள்ளுங்களேன். உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

June 1, 2010 at 9:48 PM

தெளிவான விளக்க வடிவம். நீளமாக ஆகிவிடக் கூடாதென்று நினைப்பதை விட உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும். கடைசியில் தீ சுடரின் மீது smudge tool பயன்படுத்தி இருந்தால் இன்னும் தத்ரூபமாக வந்து இருக்கும் என்று கருதுகிறேன்.

June 2, 2010 at 4:26 AM

எழுத்துருவில் தீ எரிவது மிக அருமை.
எஸ்.துரைராஜ்,செய்யாறு.

June 2, 2010 at 6:54 AM

தோழர்கள் சசிகுமார் , வினோ, துரைராஜ் அவர்களுக்கு நன்றிகள்.

சசிக்குமார் வழக்கம் போல பாராட்டியுள்ளார். வினோ கருத்தும் ஏற்கக்கூடியதே

நன்றிகள்.

June 2, 2010 at 8:25 PM

அருமை நண்பரே
பக்காவாக வருகிறது நெருப்பு
நன்றி

நம்மளயும் பாருங்க

www.jillthanni.blogspot.com

ஒரு விளம்பரம் தான்

Anonymous
June 8, 2010 at 11:53 PM

Thanks. One request Sir. Mode (Gray,RGB,CYMk)Patri first sonnal nanraga irukkum. Enna... RGB varavillai. Grayscale than varukirathu. (Made)

June 18, 2010 at 9:21 AM

வணக்கம் தோழா. அசத்துகிறீர்கள், வாழ்த்துக்கள்.

Anonymous
November 19, 2012 at 12:50 AM

buy cheap phentermine phentermine yellow capsules 30mg - buy real phentermine online 2011

இதை உங்கள் பதிவில் இணைக்க...