நெருப்பு நரிக்கு புது புது சட்டை- வலைத்தள அறிமுகம்.

நெருப்பு நரி (பையர் பாக்ஸ்) இணையதள பயன்பாட்டுக்கு நாம் பயன்படுத்தும் ஒரு மென்பொருள். இணையத்தில் பல மணி நேரம் இருப்பது எல்லோருக்கும் வாடிக்கையான ஒன்று.

ஒரே வடிவமைப்பை பார்த்து பார்த்து அலுப்புத்தட்டிய நேரங்களும் இருக்கும்.

இதன் குறையை போக்குகிறது இத்தளம்.

கருப்பு வெள்ளையில் கலக்கல் தோற்றம். போட்டோசாப்

பல விளம்பரங்களில் பார்த்த வடிவமைப்பு... முக்கியமாக திறைப்பட விளம்பரங்களில் கண்டு இருக்கலாம். ஒரு ஓவிய வடிவத்துடன் ஒளி மேம்படுத்தப்பட்ட செறிவுடன் ஒரு படத்தை உருவாக்கப்போகிறோம்.

யூ டியுப் காணொலிகளை பதிவிறக்கம் செய்ய ...

யூடியூப் தளம் பல்முக காணொலிகளை கொண்ட தளம். இதில் சமூக பகீர்வு தளமாகவும் விளங்குகிறது. இதில் உள்ள காணொலிகளை பதிவிறக்கம் செய்ய சில இணைய தளங்களை இதில் பார்ப்போம்.

கூகுளில் சில டிப்ஸ்கூகிள் தேடு எந்திரம் உலக இணையவாசிகளிடம் பிரபலமானது. இதில் பயன்படுத்த சில டிப்ஸ்...

குறிப்பிட்ட வண்ணத்தை தவிர்த்து மற்ற இடத்தை கருப்பு வெள்ளையாக்க..


படம்.1.சிவப்பு வண்ணத்தை கொண்ட பூக்களின் படம் திறந்துள்ளேன். இதில் சிவப்பு வண்ணம் தவிர்த்து மற்ற பகுதியை கருப்பு வெள்ளை படமாக்கப்போகிறோம்.

படங்களைமட்டும் வித்தியாசமான தேடும் எந்திரங்கள் (Search Engines )

பிரபல தேடு எந்திரங்களான கூகுள், யாகு, பிங்,ஆல்டாவிஸ்டா,ஆஸ்க் போன்றவற்றை தேடும் பொருள், செய்திகள் அடிப்படையில் தேடுவோம். ஆனால் படங்களை மட்டும் அடிப்படையாக தேடும் எந்திரங்களை இப்போது நாம் பார்க்கப்போகிறோம். புதிய அனுபவத்தை உங்களுக்கு இத்தளங்கள் கொடுக்கும்.

உங்கள் பென் ட்ரைவர்களை வைரஸ்களிடமிருந்து பாதுகாக்க...

ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிளாப்பி ட்ரைவர்கள் வைரஸ்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளை செய்து கொண்டு இருந்தன.

இப்போது காலம் மாறிவிட்டது.

பிளாப்பிகளுக்கு மாற்றாக பிளாஷ் டிரைவர்கள்...

ஆனால் பிளாப்பி பணிகளை உங்கள் பென் டிரைவ்கள் செய்கிறது.

உங்கள் கோப்புகளுடன் வைரஸ்கள்....

தடுக்கமுடியுமா?

முடியும்.

சின்ன கோப்பை பதிவிறக்கம் செய்தால் போதும்.

சுறுக்கப்பட்ட வடிவத்தில் கிடைக்கும்.

இக்கோப்பின் அளவு 500கேபி அளவை மட்டுமே யுஎஸ்பி டிரைவில் பிடிக்கப்போகிறது.

இங்கே கிளிக் செய்து கோப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

சுறுக்கப்பட்ட கோப்பான ரார் (Rar) வடிவத்தை விரித்துக் கொள்ளலாம் அல்லது சிப் 7 பதிப்பில் திறந்து கொள்ளலாம்.திறக்கப்பட்ட கோப்புக்களை உங்கள் பென் டிரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்கில் ஒட்டுங்கள்.

இதற்கு பென்பொருள் மன்னிக்கவும் மென்பொருள் நிறுவத்தேவை இல்லை.

விரிக்கப்பட்ட கோப்பில் uspwriteProtect.exe பைலை கிளிக் செய்ய....

மொழியை தேர்வு செய்து...Usp write protect ON
      
Usp Write Protect OFF
   
இரு தேர்வில் ஆன் செய்து கொள்ளுங்கள்.


முடிந்த்து.

பாதுபாப்பு பணி அக்கோப்பு பார்த்துக் கொள்ளும்.

எந்த பேய், பூதம், பிசாசுக்களை அண்ட விடாது.


இந்த தாயத்து ஆப் ஆகிவிட்டால் வைரஸ் ஆட்டுவித்துவிடும்.
************

இன்று

நாள் 06.06.2010...

6.6.66 இதே தேதியில்தான் இந்த மகான் பிறந்தான்.

நாட்களை பாருங்கள்.6666.

20 ஆண்டுகளுக்கு முன் வெட்டியாய் தெருக்களை சுற்றிக் கொண்டிருந்தவன்.

அதே வேலையைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன்.

இணையத்தை வலைபக்கத்தினூடாக சுற்றிக் கொண்டு இருக்கிறேன்.

44 வயதில் ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

கொஞ்சம் போட்டோசாப், பிளாக் என்று பயணித்துக் கொண்டு இருக்கிறேன்.

மார்க்சியம்... என்னை ஒழுங்குபடுத்தியது.

சிவப்பு பெரியார்

சிவப்பு அம்பேத்கர் இப்போதைய தேவை என்ற கொள்கையில் உறுதியாக உள்ளவன்.

முதுகெலும்பில் பெரிய அறுவை செய்து ரூபாய் 10,000 செலவில் போல்டை என் துனைவியாருக்கு வைத்தது தான் அவர் கண்ட பலன்.

இரண்டு மகன்கள்...

தமிழ்நட்டில் தமிழில்தான் படிக்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்து பிறழாது... மகன்கள் தமிழ் வழியில் தான் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நான் தாண்டாத 250 மதிப்பெண்ணை 10ம் வகுப்பில் 430 எடுத்து என்னை வெட்கப்பட வைத்தவன் பெரியவன் அன்பு. பெயரே அன்புதான்.

துறுதுறு... சுறுசுறுப்பு திலீபன் இளையவன்.

இவர்களின் ஒத்துழைப்போடு இவர்களின் கைபிடித்து நடக்கக் கற்று வருகிறேன்.


இப்படம் துனைவியார் எடுத்தது. போட்டோசாப் கொஞ்சம் அழகு படுத்தி இருக்கிறது.

தோழமையுடன்....

தொலைத் தூர கணினியை இயக்க இலவச மென்பொருள்

என் அலுவலக்கத்தில் கணக்கியல் சம்மந்தமான புதிய மென்பொருள் ஒன்றை கணினியில் பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். இதில் சில தவறுகள் பயன்பாட்டில் நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது. ஆனால் இது குறித்து தலைமை இடத்தித்தில் இருந்து அறிவுறுத்தியும் அதை மேம்படுத்த முடியவில்லை. பிறகு அவர்களிடத்தில் இருந்தே அதாவது தொலைதூரத்தில் இருந்தே கணினியின் தகவல்களை பெற்றார்கள், மாற்றினார்கள், பயிற்சியும் கொடுத்தார்கள். அவர்களிடத்தில் இருந்தே இங்குள்ள கணினியை இயக்கினார்கள்.

இச்செயல் பிரமிப்பைக் கொடுத்தது. படித்தை கேட்டதை என் கண்முன்ணாலேயே விட்டாலச்சாரியார் படம் போலவே நிகழ்ந்தது. நவீன உலகத்தில் எல்லாமே சாத்தியம் என்றாலும் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து இக்கணினியை இயக்குவது அதிசயம் தான்.

சுமார் 6 கோடி பேர்  50 நாடுகளில் இம்மென்பொருளை பயன்படுத்துகின்றனர் என்பது கூடுதல் தகவல்.


ஆம். டீம் வீவர் மென்பொருளோ அது. இலவசமாகத் தருகிறார்கள். எந்த இரண்டு கணினியை இணைக்கப் போகிறோமோ இவ்விரண்டு இடத்திலும் இம்மொன்பொருளை இணைய இணைப்புடன் கணினியில் இயக்கத்தில் இருக்க வேண்டும்.

நமது கணினியில் நிறுவும் போதே உங்களுக்கான பாஸ்வேர்டை கேட்கிறது. பிறகு அம்மென்பொருளே ஒரு ஐடி எண்ணையும் கொடுக்கிறது.(படம்.1.)


தொலைதூர தொடர்பாளரையும் நாம் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவி இருக்கச்செய்ய வேண்டும். டீம் வீவர் மென்பொருளின் அளவு 2.7 எம்பி மட்டுமே.

அவர்கள் நிறுவிய பின்னர் தொலைதூர கணினியில் கொடுக்கப்பட்ட ஐடி எண்ணை நமது கணினியில் தட்டச்சு செய்து அவருடன் இணைப்புக் கொள்ளலாம். (படம்.2.)


தொலைத்துற தொடர்பாளரின் ஒத்துழைப்பு இல்லாமல் நாம் இணைப்புக் கொள்ளமுடியாது. அதனால் கணினிக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. கோப்புக்களை பரிமாறிக் கொள்ளலாம், பரிமாறும் போது சாட்டிங்கும் செய்யலாம்.


வீட்ட்டுக் கணினியில் கோப்பு இருக்கிறதே பென் டிரைவரும் மறந்தாச்சே என்ற கவலை வேண்டாம். உங்கள் செல்போனிலேயே வீட்டை தொடர்பு கொண்டு கணினியை இயக்கச்செய்யச்சொல்லி , உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விடலாம்.

நாம் கர்சரை ஆட்டினால் வேறு கோப்பை திறந்தால், அந்த குரங்கை கையை சும்மாவைத்துக் கொண்டு அமைதியாக இருக்கச்சொல்லுங்கள் என்று மறுமுனையில் இருந்து சொல்லக் கேட்பது நகைச்சுவையே.


அவர்களுக்கு அங்கிருந்தே பயிற்சியும் கொடுக்கலாம்.

இவ் அனுபவத்தைப் பெற இங்கே சொடுக்கி பதிவிறக்கம் செய்து இவ்வசதியை பெறுங்கள்.

நீங்கள் சென்றுதான் கோப்பை எடுக்கமுடியும், உங்களுக்குத்தான் தெரியும்  என்ற சங்கடங்களுக்கு இம்மென்பொருள் இருந்த இடத்தில் இருந்தே தீர்வு தரும்.
தோழமையுடன்...

தீப் பிடித்து எரியும் எழுத்து-போட்டோசாப்.
பதிவிட்டு நீண்ட நாளாகிவிட்டது. இப்போது பார்க்கும் நுட்ப்ப் பதிவு. தீப்பற்றி எரியும் தோற்றத்துடன் கூடிய எழுத்து.

எளிதாக புரிய பல பட விளக்கம் கொடுத்துள்ளேன்.

சரி. பயிற்சிக்கு செல்வோம்.

இதை உங்கள் பதிவில் இணைக்க...