விண்டோ எக்ஸ்பி திறக்கும் ஒலிக்கு நமக்கு பிடித்த ஒலிக்கோப்பை இணைக்க...


விஸ்டா, விண்டோ 7 வந்தாலும் பெறும்பாலும் நாம் பயன்படுத்தும் ஆப்ரேடிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பி-ஐதான் நாம் பயன்படுத்துகிறோம். இதில் வால்பேப்பர் மாற்றுவதுப் போல, திறக்கும் போது கேட்கும் ஒலியைக் நாம் மாற்றலாம்..
லாக் ஆண் ஆகும் போது கேட்கும்  ஒலிக்கூட எரிச்சலை உண்டாக்கும். இதற்கு மாற்றாக நாமே நமக்குப்பிடித்த ஒலிக் கோப்பை தயாரித்து இணைத்து விடலாம்.
முக்கியமாக .wav  ஒலிக்கோப்பின் வடிவத்தைதான் ஏற்றுக் கொள்ளும் ஆகையால்  நம்மிடம் உள்ள எம்பி3யையோ அல்லது வேறு கோப்பை  .wav  ஒலிக்கோப்பாக மற்ற வேண்டும். இதற்கு பல ஆடியோ கண்வர்டர் மென்பொருள்கள் உள்ளது.
குறிப்பாக
மேற்கண்ட வலதளங்களில் இதுப் போன்ற பல மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கிறது.
ஜெட் ஆடியோ உங்களிடம் இருத்தால் இன்னும் வசதிதான்.
உங்கள் குழந்தைகளை பேச வைத்து  ஒலிக் கோப்பை சேமியுங்கள்.
“வணக்கம், உங்களை அன்போடு வரவேற்கும் குமார்
அல்லது
உங்களுக்காக நான் கணினியை திறக்கிறேன். அன்புடன்.....______________ இப்படி உங்களுக்கு பிடித்த ஒலிக்கோப்பை .wav   வடிவத்தில் சேமியுங்கள்.
இல்லை என்றால்
உங்கள் எக்ஸ்பியிலேயே ஆல் புரோகிராம்-அச்சரிஸ்-இண்டெர்டெயின்மெண்ட்-சவுண்ட் ரெக்கார்டர்  சென்று திறந்து கொண்டு பதிவு செய்யுங்கள். இதற்கு தனி மைக்ரோ போன் தேவை. எட் போனுடனேயே இப்போது மைக்ரோபோன் கிடைக்கிறது,
சரி .
பணிக்கு செல்வோம்
படம்.1.
கண்ட்ரோல் பேனலில் சவுண்ட் /ஆடியோ டிவைசஸ் தேர்வு செய்யுங்கள்.
படம்.2.
 திறக்கும் சவுன்ட் அடியோ டிவைசஸ் பிராப்பர்டிஸ் விண்டோவில்
சவுண்டை தேர்வு செய்து அதில் Windows Login தேர்வில் இருக்க பிரொவுஸ் செய்து உங்களுக்குப் பிடித்தமான ஒலி கோப்பை இனையுங்கள்.
படம்.3.
பிரொவுஸ் பார் லாகான் சவுண்ட் விண்டோவில் .wav   கோப்பை தேர்வு செய்து ஓகே கொடுத்துவிட்டு பாருங்கள்.
உங்கள் குழந்தையின் மழலை குரலுடன் கணினி திறக்கும்.
இதே போல் சட்டவுன்க்கும் கோப்பை இணைக்கலாம்.

4 Response to விண்டோ எக்ஸ்பி திறக்கும் ஒலிக்கு நமக்கு பிடித்த ஒலிக்கோப்பை இணைக்க...

May 11, 2010 at 5:25 AM

நல்ல தகவல் நண்பா

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

May 11, 2010 at 9:04 AM

நன்றி ஜிஎஸ் ஆர்
தொடர்ந்து தளத்திற்கு வாருங்கள்.

May 15, 2010 at 6:58 AM

தகவலுக்கு நன்றி. எல்லாக்கணிணிகளிலும் ஒரேமாதிரியான துவக்க ஒலியைக்கேட்டு வெறுப்பாக இருந்தது. மாற்றம் ஏற்பட உதவியதற்கு நன்றி.
மா.மணி

Anonymous
July 26, 2010 at 9:58 AM

thanks

இதை உங்கள் பதிவில் இணைக்க...