பென்சிலில் கோட்டோவியம்-போட்டோசாப்.

ஓவியம் என்றால் பென்சில் தீட்டும் ஓவியம் அடிப்படை. அந்த வடிவத்தை எளிதாக போட்டோசாப்பில் செய்யலாம்.

செய்முறையை பார்ப்போம்.

படம்.1.
உழவன் படத்தை திறந்துள்ளேன்.
இன்னொரு நகலை திறக்க ( படத்தில் காட்டியுள்ள ஐகானில் இழுத்துப்போட டூப்லிக்கேட் லேயரை உண்டாக்கலாம்.)
படம்.2.
லேயர் டூலிலேயே  கலர் டாஜ் தேர்வு செய்யுங்கள்.

படம்3. படம் அடர்த்தியாய் தோன்றி இருக்கும். இதை உல்டாவாக தலைகீழ் தோற்றம் கொடுக்கப் போகிறோம்.
தேர்வாக இருக்கும் லேயரிலேயே கன்ரோல் கியுடன்  ஐ (Ctrl + I) கீயை அழித்த இம்மாற்றம் தோன்றும்.படம்.4.
இன்னொரு முறையிலும் செய்யலாம்.
டூல் பார் இமெஜ்-அட்ஜெஸ்ட்மெண்ட்-இன்வெர்ட் அவ்வளவுதான்.
படம்.4.ஏ.

இன்வெர்ட்டான படத்தை பில்டருக்கு சென்று ப்லூர் காசியன் ப்லூர் தேர்வு செய்ய காசியன் விண்டோ தோன்றும்.
அதில் நான் 2.7 அளவை தேர்வு செய்துள்ளேன்.
படம் வண்ண பென்சிலில் தீட்டப்பட்டதைப் போல தோன்றும்.
இப்போது அதை பென்சில் எபெக்ட் கொடுக்க வேண்டும்.

படம்.5.
லேயர் விண்டோவில் அட்ஜெஸ்ட் மெண்ட் ஐக்கானை பட்த்தில் உள்ளதை சொடுக்க தோன்றும் தேர்வில் Hue/Saturation  தேர்வு செய்யுங்கள்.
அதில்
சேச்சுரேசன் அளவை “-100ஆக்குங்கள்.
படம் பென்சில் எபெக்ட் தோன்றி இருக்கும்.
இம்முறையை நான் எளிதாக கொடுத்துள்ளேன்.
பின்னூட்டம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

(படம் பெரியதாக தெரிய படத்தை கிளிக் செய்யுங்கள் )


6 Response to பென்சிலில் கோட்டோவியம்-போட்டோசாப்.

Anonymous
April 25, 2010 at 7:47 AM

Really excellent effort. I thought you are going to teach "how to draw". But this is a simple conversion method. Keep it us

April 25, 2010 at 8:01 AM

மிகவும் பயனுள்ள பதிவு... இப்படி பென்சில் ஒவோயமாக மாற்றுவது எப்படி என்றுதான் நான் கடந்த ஒரு வருடமாக முயற்சிக்கிறேன். பில்டரில் கலர் பென்சில் எபக்ட் கொடுத்துப் பார்த்தேன்.. தெளிவாக வரவில்லை...

உங்கள் முயற்சி நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்... இன்னும் நிறைய இதுபோல் எழுதுங்கள்...

April 27, 2010 at 4:33 AM

என் மகனுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. விதவிதமான போட்டோக்களை பென்சில் ஓவியமாக மாற்றி கொண்டிருக்கிறான் உங்கள் தயவில்! கோடை விடுமுறை நல்லபடியாக கழிவதில் தாயாக சந்தோசபடுகிறேன். மிக்க நன்றி சகோதரரே.

April 27, 2010 at 6:32 PM

@Kousalya பின்னூட்டம் அளித்த அபராஜித்தன்,கௌசல்யா- அவர்களுக்கு என் நன்றிகள். நன்றி. போட்டோசாப் நம்முள் உள்ள கலை உணர்வை அகழ்ந்து கொண்டுவரும். தொடர்ந்து உங்கள் பயணம் தொடரட்டும்.

April 27, 2010 at 10:56 PM

ungal annaithu pathippugalum migaum payan ullavai.. naanum katru kondu varukiren.. mannikavum tamil yelluthadarkku

April 28, 2010 at 6:09 AM

very nice. Thanks!

இதை உங்கள் பதிவில் இணைக்க...