சலன / தெளிவற்ற படங்களை உருவாக்க- போட்டோசாப்.

நல்லப்படங்களை சிதைத்தால் அதுவும் கலைநயத்தோடு எப்படி ?
விளம்பரத்துறையில்  அதிகம் பயன்படுத்தும் கருவி.

ஆம் அசைவு நிலையில் ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் ?

அவுட்டாப் போகஸ் என்பார்கள் அதுவே வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை படம் எடுத்தால் அதுவே கலையாகிவிடும்.


நாம் செய்யப்போவது நல்லப்படத்தை சலன / தெளிவற்ற  படங்களை உருவாக்கப் போகிறோம்.
சரி
பயிற்சிக்கு செல்வோம்.
படத்தை போட்டோ சாப்பினுல் திறந்து கொள்ளுங்கள்.

பிறகு பில்டர்-புலூர்- மோசன்/ரேடியல் புலூர் தேர்வு  உங்கள் விருப்பமே.

கொஞ்சம் பயிற்சியில் நீங்கள் தேறிவிடுவீர்கள்.
படம் அழிந்த/அசைந்த/சூம் நிலையில் மாறி இருக்கும்.
நாம் பயன்படுத்தப்போகும் கருவி ஹிஸ்டரி பிரஸ். ஆம் பழைய நிலையை நினைவில் வைத்துக் கொண்டு இருக்கும்.
இக்கருவி பிரஷ் கருவிக்கு கீழே இருக்கும்.
படத்திக் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் மாற்றம் செய்த படத்தில் கர்சரை கொண்டு தேய்க்க பழைய நிலை வர ஆரம்பிக்கும்.
நாம் ஒபாசிட்டி/ ப்ளோ குறைத்து இப்பணியை செய்ய படம் தோன்ற ஆரம்பிக்கும்
.

சேமிக்க வேண்டியதுதான்.
மாதிரி படங்கள் இம்முறையில் உண்டாக்கப்பட்டவையே.
படத்தை பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும்.

வாழ்த்துக்கள்.

4 Response to சலன / தெளிவற்ற படங்களை உருவாக்க- போட்டோசாப்.

April 17, 2010 at 7:59 PM

இதெல்லாம் இருக்கட்டும் .முதலில் எனக்கு தமிழ்மணம் பட்டை install பண்ண முடில .அது கொஞ்சம் சொல்லுங்களேன்

April 17, 2010 at 8:09 PM

@padma
முதலில் நீங்கள் தமிழ்மணம் தளத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும்.
அவர்கள் இணைப்பு கொடுத்து இருந்தால்...
http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

இம்முகவரிக்கு செல்லுங்கள்.

உங்கள் ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைக (”login”)
2. ஆதாரக்கிடப்புகளை முகாமைப்படுத்து (“Manage Layouts”) பகுதிக்குச் செல்க (இப்போது அடைப்பலகை (“Template”) பகுதியில் இருப்பீர்கள்).
3. மீயுரை சீர்திருத்து (“Edit HTML”) என்கிற பகுதிக்குச் செல்க
4. உங்கள் அடைப்பலகையை திருத்தி மாற்றுமுன் அதன் நகலை சேமித்துக்கொள்வது நன்று. அதைத் தரவிறக்கி கணினியில் சேமித்துக்கொள்க
5. இப்பொழுது மிக முக்கியமான ஒன்று
6. சீர்திருத்துபெட்டி (“EditBox”) இன் மேலே வலது மூலையில் இருக்கும் எடுநிலை அடைப்பலகையை விரி (“Expand Widget Templates”) என்ற சொடுக்குப் பெட்டியை தேர்வு செய்க

தொடர்ந்து...

சீர்திருத்துபெட்டி (“EditBox”) இன் உள் வைத்து எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து (Select All) அதை copy செய்து கீழிருக்கும் பெட்டியில் past செய்யவும்

அங்கு உள்ள பெட்டியில் பேஸ்டு செய்து அளி பொத்தானை சொடுக்க கொடுக்கும் கோடுகளை அப்படியே

உங்கள் எடிட் எச்டிமெல் பெட்டியில் சேமித்து பாருங்கள்.

முழு விவரம் மேற்கண்ட முகவரியில் உள்ளது.

April 18, 2010 at 12:19 AM

தோழன் சார்,

மிக அற்புதம் போட்டோஷாப் பாடங்கள். தொடரட்டும் உங்கள் சேவை. என்னுடைய மனமார்ந்த பாராட்டும் நன்றியும்

நட்புடன்

அப்ரின்

April 18, 2010 at 12:25 AM

@afrine
நன்றி, அப்ரின். உங்கள் ஆதரவு தொடருவதில் பெருமைக் கொள்கிறேன்.

இதை உங்கள் பதிவில் இணைக்க...